சனி, 17 மார்ச், 2012

தோழியின் பிறந்த நாளுக்காய் - 17

17)
பைக்கட்டு தூக்கி
பள்ளிக்குப்போய் வாவென்று
பவ்யமாய் அம்மா வழியனுப்ப…

துள்ளிக்கிட்டு ஓடும்
தூயதொரு புள்ளிமானாய்
பள்ளிக்கு போய் வாவென்று
பாசத்தோடு அப்பா கூட்டிச்செல்ல..

நன்றாய் படித்து வாழ்வில்
வென்றாக வேண்டுமென்று
திண்டாடமல் தேறினார் என் தோழி

படிப்போடு பலவும்
சிறப்போடே கற்று
சீர்மையோடு தேறினார் என் தோழி
எதிலெல்லாம் என்று கேளுங்கள்

என்னிடம் மட்டும் – ஆம் பள்ளிக்கு
மட்டம் போடுவது; மாங்காய் அடிப்பது
வம்பு செய்வது, வாயடிப்பது…
ஹி..ஹி..ஹி.. :bounce: :bounce: :bounce:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...