வெள்ளி, 16 மார்ச், 2012

தோழியின் பிறந்த நாளுக்காய் - 4


4)
முறங்கொண்டு உழுவை புறமுதுகோட்டி
திறங்கொண்டு விண்ணோடு நடைபாடி
அறங்கொண்டு அரியணையில் ஆட்சியமைந்து
பலங்கொண்டு வாழ்வீர வரமருளும்
பங்குகொள் பதியொடு வாழ்உமாவே
துணையாய் வருவாய்
துடியிடை எந்தன் தோழிக்கே!முன்னொரு காலத்தில் தன்னைத்தாக்க வந்த புலியை (உழுவை) முறங்கொண்டு விரட்டியவள் ஒரு தமிழ்ப்பெண். அதே பெண்மை தான் விண்ணில் நடைபயணம் மேற்கொண்டு சாதனை புரிந்தது, சில இடங்களில் அரியணையில் அமர்ந்தும் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றது. இத்தகைய வீரக்குணத்திற்கு தலைமகளாய் விளங்கும் சிவனோடு பாதிக்குப்பாதியாய் பங்கு கொண்டு வாழ்கின்ற உமையம்மையே!!

வீரத்தில் துள்ளி அசையும் இடையைக்கொண்ட எந்தன் தோழிக்கு துணையாய் வருவீரே!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...