வெள்ளி, 16 மார்ச், 2012

அனைவர் மீதும் அன்பு

  • படைப்புகள் அனைத்தும் இறைவனின் குடும்பமாகும். படைப்புகளுக்கு நன்மை புரிபவரே இறை நேசத்திற்கு உரியவராவர்.
  • மண்ணிலுள்ள மனிதர்களை நீங்கள் நேசித்தால் விண்ணிலுள்ள இறைவன் உங்களை நேசிப்பான்.
  • அன்பு என்பது உங்கள் உறவினர்கள் மீது மட்டும் செலுத்தப்படுவதல்ல. அன்பு அனைவர் மீதும் செலுத்தப்படுவதாகும்.
  • உங்களுக்கு விரும்புவதையே பிறருக்கும் விரும்பாதவரையில், நீங்கள் உண்மையுள்ள இறை நம்பிக்கையாளர் ஆக முடியாது.
  • தனிமனிதனின் உரிமைகளைப் பறிக்கக்கூடாது. சமுதாயத்தின் தேவைகளைப் புறக்கணிக்கக் கூடாது. இவ்விரண்டிற்குமிடையில் இணக்கமும் நடுநிலையும் வேண்டும்.
  • எந்த ஒரு சமூகமும் தன் பண்புகளை மாற்றிக் கொள்ளாத வரை, உண்மையில் இறைவனும் அச்சமூகத்தின் நிலையை மாற்றுவதில்லை.
-வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...