ஞாயிறு, 18 மார்ச், 2012

கனவோடு சில வரிகள்.!

இந்தக் கிறுக்கலினை ஒரு வரியில் இருக்கும் சொற்களை இரண்டு இரண்டு தொகுப்பாக எடுத்துப் படிக்கும் போது கொஞ்சம் பொருள் (கவிதை போல) விளங்கலாம். தனித்தனியாக வாசிக்கும் உரை நடை போன்ற உணர்வினைத் தந்தாலும் தரலாம்..!



அன்றொரு நாளிரவிலே அயர்ந்து நானுறங்க
காரிருளோடு கண்டேன் ஓர் கனவு...!

என்னோடு தமக்கையாரும் எப்போதுமே சண்டை தான்
முன்பகையுமில்லை மூத்தவரென்ற பவ்யமுமில்லை
தம்பி இவனென்று தாங்கிய பொழுதுகளுண்டு-ஆனால்
தமக்கை இவரென்று அன்பொழுத பொழுதுண்டோ.? :pale:

வந்த கனவிலும் வம்பிழுக்க நானிருந்தேன் :argue:
வாங்கிக் கொள்ள அவரிருந்தாரே..! :hello1: :hello1:
சமாச்சாரம் இல்லாமலே சண்டையும் நடக்குதாங்கே
சமரசம் செய்வதற்கு சாமீ கூட வரலீயே!! :shaking: :shaking:

சண்டை போடுகையிலே சட்டென்று ஓர்குரல்
திகிலோடு நான் திரும்ப திட்டியபடி அம்மாவுமங்கே!
தரிசனம் கண்டமென்கால் தகதிதத்தோம் போட்டனவே

வயலுக்குப் போடா தம்பி.! வரப்பிலே உட்காரு
ஆடு மாடு வந்திடாமே அடிச்சி விரட்டிக்கிட்டு
வெயிலும் படாம வேம்பு நிழலியேயிரு :glasses9: :glasses9:

அக்காவும் நானும் அப்புறமா வந்துடுவோம்
அன்பாய் அம்மா சொல்ல ஆட்டினேன் தலையை மறுத்தே.!

அக்கா வராம அடியேனும் போகமாட்டேன்
முக்காலமும் சத்தியமாய் மூணுமுறை சொல்லிட்டேன்
இவனோடு நானா போக, அது என்னாலே முடியாது
என்னாளும் முடியாதம்மா..- இது அக்கா :spiderman: :spiderman:

சண்டை போடாம சமத்தாப் போங்கடா
பின்னாலே நான் வாரேன் பொறுத்த நேரத்திலே
சொல்லி நின்ற அம்மாகுரலே சுவரோடு எதிரொலிக்க
அன்பாய் வந்த குரல் அம்பாய் மாறுமுன்னே
சண்டை போட்ட நாங்கள் சமாதானமாகிக் கொண்டு
சுட்டு வச்ச பணியாராத்தை சுருட்டிக்கிட்டு ஓடிட்டோமே!! :thumbright:

ஓடிப்பிடிச்சிக்கிட்டு ஒருத்தரையொருத்தர் அடிச்சிக்கிட்டு
காட்டுப் புறாவுக்கும் கையிலேயே தீனி கொடுத்துக்கிட்டு
பத்தே நிமிசத்துல பனங்காட்டை கடந்திட்டோம்

பனங்காட்டு எல்லையிலே பத்தடியாழக் கண்மாயிருக்கு
கண்மாய்க்கரையோரம் காளிக்கு கோயில் ஒன்று
கோயில் பூசாரியோ கோவிச்சுக்கிட்டுப் போயிட்டாராம்
ஆளரவம் இல்லாமலே அப்படியொரு நிசப்தம்
அக்கா காதுல மட்டும் ஏனோ சத்தம்..! :idea1: :idea1:

ஒளிஞ்சிக்கிட்டு யாரோ ஒய்யாராமாய்ச் சிரிக்குதுடா
அழுகிட்டே அக்கா சொல்ல அரண்டுட்டேனே நானுந்தான்

சாமி சிலையோடு சன்னிதியே நகரக் கண்டேன்
ஓடி வந்த மூச்சும் ஓய்வெடுக்கப் பார்த்திருச்சு.
பின்னங்கால் பிடறியடிக்க பிச்சுக்கிட்டு வந்துட்டோம்

வயலுக்குப் போகாமலே வழியிலே திரும்பிடவே
காட்டமாய் திட்டுமுன்னே கலங்கிய எம்மைக் கண்டு
என்னடா ஆச்சுன்னு எப்படியெப்படியோ கேட்டாலும்
திடகாத்திரமாய் சொல்லுவதற்கு திராணியில்லை என்னிடமும்
அழுகாச்சி காவியமாய் அம்மாவிடம் ஒப்புவிக்க :crybaby: :crybaby: :crybaby:

கண்முழிச்சிப் பார்க்கையிலே கட்டிலுக்கு மேலே நானிருக்க
கனவா இதுவென கலகலன்னு சிரிச்சிட்டேன்.!! :sad1: :sad1:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...