நாலாறு காலமாய் வந்திடாவென் புத்தி
நாளையா வரப்போகுது அதுவும் இல்லையே
நாளையே நாறப் போகுது என்சிவனே!
கடவுளென் போன் கற்சிலை நிற்பவ னல்லதோர்
கற்பின் வடிவமாய் பொருப்பின் பூமுடிச்சாய்
நட்பின் ரீங்காரமாய் நல்லதே நடாத்துபவன்
கருணை மறந்து கவலை தந்தானெனக்கு
அருளை வழங்கிட அயர்ந்திட் டானவனே
தந்த கவலையோ தனித்தனியாய் தந்திடாவே
அலைமொத்தமாய் தலைமிச்சமாய்.
ஒத்தை மகனாய் பிறந்தோன்
ஓயாதே உழைத்தே செத்தான்
தன்னுடன் பிறப்போ தகைசால்
தமையனவன் தருவான் சீரென்றும்
தகப்பனுக்கும் சோறுட்ட தாயவள்
சீராட்ட தம்பியோன் படும்பாடு அப்பப்பா...
என்னிலை இவையில்லை எனினும்
ஏறக்குறைய வந்திடும் கடிதே
நன்றாய் வளர்ந்தோங்க நான்குமறை
கன்றாய் தேறிகரைசேற என்றும்
வென்றாய் நீயென வெறுப்போரும்
சொல்லிடவே அருள்வாய் இறையே!
கவிதை மிக நன்று!
பதிலளிநீக்குநல்ல வேளை..! திட்டாம விட்டீர்களே அக்கா..!
பதிலளிநீக்குமகிழ்ச்சி