திங்கள், 19 மார்ச், 2012

பொன் மொழிகள் - விவேகானந்தர்

ஒவ்வொரு உயிரிலும் கடவுள்
 • சுயநலமற்ற தன்மையே கடவுள் ஆகும். ஒருவன் செல்வந்தனாக வாழ்ந்தபோதும் சுயநலம் இல்லாதவனாக இருந்தால் அவனிடம் கடவுள் இருக்கிறார்.
 • ஒரு நல்ல லட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீரனாக விளங்குங்கள். மனிதனாக பிறந்ததற்கு வாழ்ந்து சென்றபின்னும் ஏதாவது அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள்.
 • உங்களுடைய நரம்புகளை முறுக்கேற்றுங்கள். காலம் எல்லாம் அழுது கொண்டிருந்தது போதும். இனி அழுகை என்ற பேச்சே இருக்கக் கூடாது. சுயவலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து நில்லுங்கள்.
 • தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு நன்மை
 • செய்வதும் தான் எல்லாவழிபாடுகளின் சாரமாகும். ஏழைகளிடமும் பலவீனர்களிடமும் நோயாளிகளிடமும் இறைவனைக் காண்பவனே உண்மையான வழிபாடு செய்பவன் ஆவான்.
 • கடவுள் ஒவ்வொரு உயிரிலும் குடிகொண்டிருக்கிறார். இதைத் தவிர தனியாக வேறு கடவுள் ஒருவர் உலகில் இல்லை.

ஆன்மீக வெள்ளத்தில் மூழ்குவோம்

 • அன்பு இருந்தால் உலகில் முடியாதது ஒன்றுமே கிடையாது. அதேபோல் தன்னலத்தையும் துறந்தால், உங்களை எதிர்க்கும் சக்தி உலகில் ஒன்றுமே இல்லை.
 • அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றுமே நமக்கு தேவையில்லை, அன்பு தான் வாழ்க்கை.
 • உள்ளத்தை திறந்து வைத்திருந்தால் உலகிலுள்ள நல்ல நினைவுகள் அனைத்துக்கும் உரிமையுள்ளவர்களாகி விடுவோம்.
 • மலைபோன்ற சகிப்புத்தன்மை, இடைவிடாத முயற்சி, எல்லையற்ற பரிசுத்தம், இவை தான் நல்ல செயல்களுக்கான வெற்றியைத் தரும் ரகசியம்.
 • நம் தேசத்தின் முன்னேற்றம் ஆன்மிக எழுச்சியால் தான் ஏற்படும் என்பதால் சமுதாயம், அரசியல் கருத்துக்களைப் பரப்புவதற்கு முன்னால் நாட்டை ஆன்மிக வெள்ளத்தில் மூழ்குவியுங்கள்.
 • நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய், வலிமை உள்ளவனாக நினைத்தால் வலிமை படைத்தவனாக ஆகிறாய்


-விவேகானந்தர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...