வெள்ளி, 16 மார்ச், 2012

தோழியின் பிறந்த நாளுக்காய் - 5


5)
காலையில் மலரும் கதிரவனின் செம்முகமும்
மாலையில் வளரும் மதியோனின் தன்குளிரும்
சோலையில் உளரும் சுரும்பின் உளமகிழ்வும்
நாளெல்லாம் நினக்கமைய நான் வாழ்த்தியே!!காலைப்பொழுதில் உதிக்கும் கதிரவனின் செழுமையான முகம் போன்றதாகவும், மாலையில் தோன்றும் சந்திரனின் குளிர்ச்சி பொருந்தியதாகவும் உங்கள் முகம் எல்லா நாளும் இருக்க வேண்டும்.

சோலையில் பூவின் மயக்கத்தால் உளருகின்ற சுரும்பின் (வண்டின்) மன மகிழ்வைப்போன்று உங்கள் உள்ளம் மகிழ்வானதாய் என்னாளும் அமைய நான் வாழ்த்துகின்றேன்.

கருத்துகளை முக நூலின் முகவரி வழியாகவும் பகிரலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...