ஞாயிறு, 18 மார்ச், 2012

வசு அக்காவின் பெற்றோருக்கு

ஜூன் 01, 2011 5:41 am

34ஆம் ஆண்டு திருமண நாள் கொண்டாடும் நம் வசுப்ரதா மற்றும் ஹேமபாலாஜி அவர்களின் பெற்றோரை வாழ்த்திடுவோமாக..ஆகாயந் தொட்டிடவே ஆசையோடு நீளும்
வாகாய் சூழ்ந்திட்ட வளம்தரு நல்லாலோடே
மேவாப் புகழ்கொண்டு மென்னையே ஈந்தருளும்
சாவா கற்பகத் தருவாம் நற்பனைபோலே
ஆண்டு பலகடந்து அற்புதமாய் இல்லறமீந்து
அன்பொடு திகட்டா அறப்பொருளும் காட்டி
அதட்டா அன்னையாய் அறிவுதரு தந்தையாய்
திகட்டா வாழ்வு நடாத்தும் நற்தகையீரே.! - தாங்கள்
புகழோடு வாழ புவியரசன் அருள்வானாக....
அன்பொடு நிந்தன் அரசாட்சிக்கு
ஆதரமாய் நான் கேட்டதொரு நினைவு...
இளையோள் கேட்டழுத இனிப்ப முதிற்கு
ஈடுயிணை இயற்கைப் பொருளாயீந்தீரே
உவப்பாய் கேட்டு உள்ளுரே நகைத்தேன்
ஊலகமே கைகொட்ட உயர்தரு சிந்தனையே
எண்ணமே வடிவாக எளிமைதனை உருவாக
ஏற்புடை நலம்தரு இணையொடு பல்லாண்டு
வாழிய நன்னலம் வணங்கிட்டேன் நன்றியோடே.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...