வெள்ளி, 16 மார்ச், 2012
தோழியின் பிறந்த நாளுக்காய் -3
3)
எண்ணிரண்டு செல்வமழை ஏற்றமோ டேவலம்வர
தரணிவாழ் தாரளமாய் தவழ்ந்துவரு பொருளே
வள்ளுவன் வழியாங்கே வளர்வேண்டி நினையே
சிறப்பாய் செல்வமருளும் சீர்மிகு அலைமகளே
நிந்தன்தரி சனம்தருவேண்ம் டியேஎன் றோழிக்கே.
எண்ணிரண்டு செல்வங்களும் [ 1. கல்வி, 2. புகழ், 3. வலி, 4. வெற்றி, 5. நன் மக்கள்,6. செல்வம், 7. தானியம் ,8. நல்லூழ், 9. நுகர்ச்சி, 10. அறிவு, 11. அழகு, 12. பொநுமை,13. இளமை, 14. துணிவு,15. நோயின்மை, 16. வாழ்நாள்] குறைவின்றி ஏற்றம் கொண்டு வலம் வருதல் வேண்டும். தரணியில் வாழ பொருட்செல்வம் இந்தக்கால கட்டத்தில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்றது. அதனால் தான் வள்ளுவன்
பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை
அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை என்று கூறியுள்ளார். அத்தகைய பொருட்செல்வத்திற்கு தலைவியாய் விளங்கும் அலைமகளே, உங்களுடைய தரிசனம் என் தோழிக்கு வேண்டி நின்னை நான் வேண்டிக்கொள்கின்றேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக