17/04/2010:
நேற்றுடன் நெடிய தூக்கம் கலைந்து
ஆறாறு மாதங்கள் ஆகிவிட்டன
ஆறாத என் நெஞ்சில்
அம்மைத்தழும்பாய் ஓர் வடு..
பகலிலே பாடிய என் பச்சைக்கிளியே
இரவிலே தொலைந்தேனோ எங்கோ?
தேடிய பொழுதுகள், திண்ணாத உணவுகள்
நாறிய நலம், அதனால் போனதென் வீரியமாண்பு
எட்டுத்திக்கும் தேட ஏதிலா முடிவுகள்
எழா உறவுகள்; என்றுமகலா நினைவுகள்
பாலாய்போனது பந்தங்கள்
நூலாய் போனது எங்கள் நெஞ்சங்கள்..
எல்லாம் கண்முன் ஆடிய கடவுளின் நாடகம்
காலம் மட்டும் ஓடியது
காட்சிகள் மட்டும் மறையாததேனோ?
எமனாய் வந்தவன் என்னிலை கொண்டவனோ?
பாலும், தெளிதேனும் வேண்டாவென்று
பழயதை உண்ணக்கிளம்பினாயோ?
பட்டும் மெத்தையும் வேண்டி
பனையோலையை மறக்க நினைத்தாயோ?
மாணிக்கத்தொட்டிலில் போட்டு மகிழ்வும் இல்லை
மரகதப்பட்டில் வைத்து போர்த்தவும் இல்லை
பசியாக நீ இருந்தாய் என்று
பகலவன் கூட உரைக்கமாட்டான்.
குசியாக இருந்த நாங்கள் இன்று
நசிபால் நமத்து விட்டோம்.
அண்டையரின் சொல்வண்ணம் ஆடியனுனக்கு
ஆண்டையரரின் கதறல் காதிலே காயவில்லையா
பாசமென்னும் தாழி எடுத்து வேசமென்று உடைத்தாயே
இன்று நீ
நாசமாய்ப்போனதை நான் காண வேண்டாவே கண்கள்.
நாடுவதே நலம்; வாழியவே நீயும்..
நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக