வெள்ளி, 16 மார்ச், 2012

உழவன்,தைத்திருநாள்

தைத்திங்களே மலர்க!
தமிழர் திருமகளே வருக!!
தழைத்தோங்கும் மகிழ்வதனை தங்குதடையின்றி தருக!!!
தனைமறந்து தரணிக்குழைக்கும் தமிழனுக்கு வளம்கொள் செந்நெல் பொழிக !!!!


உழவனே !
உருப்படியாய் உறங்காமல் ஊருக்காய் உழைப்பவனே
நிலைப்படியாய் நின்று நிந்தன் குடும்பத்தையும் காப்பவனே
அனைத்து மக்களின் பசிதீர ஆரவமுது அளிப்பவனே
நீ ஆண்டவனுக்கு அடுத்த எங்களின் இறைவன்.


நினக்காக மலரும் இவ்வாண்டு
நின் மகிழ்தரு புத்தாண்டு
பொல்லாங்கு வஞ்சனை குறைகளைந்து
பசிப்பிணி பட்டினி கொலையகலவே
சோடையிலா காட்டில் விதைத்த சோளம் போல
எங்களுக்கும் சேர்த்தே எழிலோடு உழைப்பாய்
நலமாய் மலரட்டும் நாளை முதல் உனக்கு...
மும்மாரி மழையும் முத்துப்போன்ற பனியும்
வெப்பிலா வெயிலும் தப்பிலா தருனக்காற்றும்
எக்காலமும் எமக்கு வேண்டியே இறைவா
முக்காலமும் உனை நாங்கள் வணங்குகின்றோமே..நன்றி
:salute: :salute: :salute:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...