ஞாயிறு, 18 மார்ச், 2012

வளர்தமிழ்ச் செல்வி வசுப்ரதா அவர்களின் அன்புத்தாயாரின் பிறந்தநாளுக்காய்..!

பிப் 27, 2012 7:12 pm
நம் முத்தமிழ் மன்ற கவிதாயினிகள் திருமதி. ஹேமபாலாஜி மற்றும் வளர்தமிழ்ச் செல்வி வசுப்ரதா அவர்களின் அன்பு தாயார் திருமதி சுலோச்சனா அம்மையார் இன்று தன்னுடைய(28-பிப்-2012) பிறந்த நாளினை இனிதே தன் குடும்பத்தினருடன், பேரன் பேத்தியரின் அட்டகாசத்தோடு இனிதே கொண்டாடவிருக்கின்றார்கள்.

அன்பு நிறைசால் அம்மாவிற்கு,

என்றும் குறைவிலா மகிழ்வோடு, நோய் நொடி நீங்கி உள்ளம் குறையாத உவகை கொண்டு பல்லாண்டு காலம் இதே நற்குடும்பத்தாரோடு வாழ்வாங்கு வாழ்வீர்களாகவென நான் வணங்கும் செந்தூரானை மனமுருகி வேண்டிக் கொள்கின்றேன்.

படம்


பலருக்குப காரம்செய் தேபரிசளித் தீர்மனதை
பலவையுமென் னில்கடந்தா லும்பழகிய நினைவகலா
பசியெடுத்தோர் பஞ்சிட்டு பறப்ப தான்முயல
புசிதரு தாயாய் புகட்டீர் நல்லுணவே
சொற்சில சுருங்கிடின் சுவையமுது குறையா
பற்பல கருகொண்டு பகர்வீர் நற்கருத்தே
ஆண்டவனடி பால்வேண்டியே நீர்
ஆயுள்மு ழுதும்நற் சுகமெய்து வீரென்று

2 கருத்துகள்:

  1. அழகிய உன் அன்பான வரிகளுடன் வாழ்த்தி மனதை நிறைய வைத்துவிட்டாய்.
    படங்களுடன் கவிதை மிக நயமாக அமைந்திருக்கிறது.
    நன்றி சிவா!

    பதிலளிநீக்கு
  2. தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி அக்கா..!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...