ஞாயிறு, 18 மார்ச், 2012

முதியோர் இல்லத்து மாந்தர்கள்

ஒரடி வயித்துக்கு ஓயாத பொழப்பு
நாயடி பட்டு நாளும் நகருது.
பொன்னா முத்தா பூவிதழ் கண்ணா
நாளை நீவளர்ந்து நாடறிய நீநடந்து
ஊரோடு உலகமும் உன்னைத் தேட‌
நானும் வளர்த்தேன் நலமாய் உன்னையே!

பட்டிலே நீயுறங்க பலமரமும் செதுக்கி
கட்டிலே காலுக்காய் கால்கடுக்க‌ நின்றோமே
மொட்டிலே நீயுதைக்க முறுவல் கொண்டதாலோ
எட்டியே உதைத்தாலும் இப்பவும் சிரிக்கின்றோம்

பிஞ்சிலே நீதந்த பெருஞ்சுவை கண்டே
அஞ்சியே நகர்த்திட்டோம் அடுத்தடுத்த பொழுதினையே
நஞ்சாய் நீஉரைக்க நாளும் நின்னொடு
கஞ்சிக்கு வழி தேடி கையேந்தி நிற்காமாலே
நெஞ்சிருக்குமுரங்கொண்டு நிமிர்ந்து நடப்போமே!

2 கருத்துகள்:

 1. முதியோர் இல்லத்து மாந்தர்கள்
  கனத்த கவிதை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வலைப்பூவின் சார்பில் இனிய வரவேற்புகள் சகோ.!

   லயித்துக் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.!

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...